Friday, July 3, 2020

சேனையூர்

சேனையூர்
 
களியோடை செல்லும் வழியெல்லாம்
காவுறு சோலையாய் நீளுறும்
சுழியோடி மீன்கள் பாடிடும்
சேனையூர் அழகைக் காணீரோ
ஆறு வளைந்து ஊரைச் சுற்றி
சேறு நீள செழிப்பின் காட்சி
தேறி விளைந்த கமுகு சொரிய
ஊறிக் கிடக்கும் சேம்பு மலர்கள்
காட்டு ரோஜா பூத்துச் சொரியும்
புன்னை மலர்ந்து புன்னகை செய்ய
கொய்யா வந்து கொடிபோல் நீள
தென்னம் பழமாய் தேங்காய் உதிரும்
அன்னமின்னாவின் அழகில் மயங்கி
சின்ன அணில்கள் வந்து குடைய
சிட்டுக் குருவியும் சேர்ந்தெ தின்னும்
என்ன என்பேன் என்னூர் சேனையூரை
பணிவு வளவுகள் பார்த்திடும் அழகு
அணி அணியாக ஆர்த்திடும் மரங்கள்
விண்ணிடை பாயும் தென்னையின் ஓலை
மண்ணிடை முட்டும் மகிழ் பலாக்கனிகள்
எண்ணிட முடியா எத்தனை அழகு
கண்ணிடை ஓடும் காட்சிகள் கோடி
கொப்பிடை ஊறிய தேனின் சுவையில்
மப்பிடை ஆடும் மந்திகள் பாய்ந்து

சேனையூர்

சேனையூர்   களியோடை செல்லும் வழியெல்லாம் காவுறு சோலையாய் நீளுறும் சுழியோடி மீன்கள் பாடிடும் சேனையூர் அழகைக் காணீரோ ஆறு...